காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழகத்தின் ஐம்பதாவது நிறைவு விழா மற்றும் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கழகத் தொண்டர்கள் பொதுமக்களுக்கு நல திட்டங்களை வழங்கி வருகின்றார்கள்.\r\n\r\nகாஞ்சிபுரம் மாநகரப் பகுதி (கிழக்கு) செயலாளரும் பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி துணைத் தலைவலமான வி. பாலாஜி அவர்கள், அப்பாராவ் தெருவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள், வேஷ்டி சேலைகள் ,பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஸ்கேல் பென்சில் போன்ற படிப்பு உபகரணங்கள் மற்றும் மூத்த கழக நிர்வாகிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். \r\n\r\nஇந்த நிகழ்ச்சியில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு கழகக் கொடியேற்றி கூடியிருந்த மக்களுக்கு நல திட்டங்களை வழங்கினார்.\r\n\r\nஅதேபோல் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எம்.புனிதாசம்பத் அவர்கள் ஏற்பாட்டில் மாகாளியம்மன் கோவில் தெருவில் கழக கொடி ஏற்றி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் புகைப்படங்களுக்கு தீபமேற்றி வணங்கி தூய்மை பணியாளருக்கு நலத்திட்ட உதவிகளும், பொது மக்களுக்கு அன்னதானமும் வி. சோமசுந்தரம் வழங்கினார். \r\n\r\nபின்னர் வேளிங்கபட்டரை பகுதியில் 45 வது வார்டு மாமன்ற உறுப்பினர் எஸ். சாந்தி சேதுராமன் அவர்கள் ஏற்பாட்டில் மலர் மாலைகளால் அமைக்கப்பட்டு இருந்த புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெ. ஜெயலலிதா ஆகியோர் புகைப்படங்களுக்கு வி.சோமசுந்தரம் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தி அங்கு கூடியிருந்த மக்களுக்கு பொங்கல் புளியோதரை போன்ற சிற்றுண்டிகளும் நலத்திட்டங்களும் வழங்கினார். \r\n\r\nஇந்நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், அகில உலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், பகுதி செயலாளர் ஸ்டாலின், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, பகுதி செயலாளர் கோல்டு ரவி, மாமன்ற உறுப்பினர்கள் சிந்தன், சண்முகநாதன், பிரேம் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.
