Saturday, December 6, 2025
Homeஅதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் நீர் நிரம்பி வழிந்து ஓடுகிறது.

ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு ,செய்யாறு ,வேகவதி ஆகிய ஆறுகள் செல்கிறது. \r\n\r\nஇந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செல்லும் செய்யாற்றில் தொடர் மழை காரணமாக நீர் நிரம்பி செல்கிறது. \r\n\r\nஇதன் காரணமாக அனுமன் தண்டலம் பகுதியில் அமைந்துள்ள பழமையான தடுப்பணையில் நீர் வழிந்து ஓடுகிறது. \r\n\r\nஇதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கசேரி தடுப்பணையிலும் தண்ணீர் முழு கொள்ளளவை எட்டி இரண்டு ஷட்டர்கள் திறக்கப்பட்டு நீர் ஆர்ப்பரித்து செல்கிறது. \r\n\r\nபருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே இந்த இரு தடுப்பணைகளிலும் அதிக நீர் செல்வதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்

RELATED ARTICLES

Most Popular

Recent Comments