Tuesday, December 16, 2025
Homeஒரு ஆழ்துளை கிணற்றுக்கு இரண்டு விதமான நிதியை ஒதுக்கிய அவலம்

ஒரு ஆழ்துளை கிணற்றுக்கு இரண்டு விதமான நிதியை ஒதுக்கிய அவலம்

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்தில், 61 ஊராட்சிகள் உள்ளன. இதில் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகிய பலவித வளர்ச்சிப் பணிகள் நடந்து வருகின்றன.

\n

ஒவ்வொரு வளர்ச்சிப் பணிகளுக்கும், ஆளும் கட்சியைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய செயலர்களே, 15 சதவீத ‘கமிஷன்’ வாங்கிக் கொண்டு, பணிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றனர். 

\n

 

\n

\n

ஒரே பணிக்கு, இரு விதமான திட்ட நிதிகளை4 ஒதுக்கீடு செய்து, பல லட்சங்களை வாரி சுருட்டி உள்ளனர்.

\n

குறிப்பாக, வாலாஜாபாத் அடுத்துள்ள வில்லிவலம் ஊராட்சி குடிநீர் திட்டத்திற்கு, 3 லட்சம் ரூபாய் செலவில், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளனர்.

\n

அதே ஆழ்துளை கிணற்றின் மற்றொரு பகுதியில், நாயக்கன்பேட்டை ஊராட்சி திட்டத்திற்கு ஆழ்துளை கிணறு அமைக்க, 5.80 லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளதாக, திட்ட பலகை எழுதி உள்ளனர்.

\n

\n

ஒரே ஆழ்துளை கிணற்றில், ஒருபுறம் நாயக்கன்பேட்டை ஊராட்சிக்கும், மற்றொருபுறம் வில்லிவலம் ஊராட்சிக்கும், ஆழ்துளை கிணறு அமைத்துள்ளதாக திட்ட பலகை வைத்து, ஒரே திட்டத்திற்கு இருவித மான நிதியை ஒதுக்கீடு செய்து, பணத்தை கையாடல் செய்து உள்ளனர்.

\n

இதை கண்காணிக்க வேண்டிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ‘கையூட்டு வாங்கி கொண்டு, பணிகளை கண்காணிக்காமல் கையெழுத்திட்டு பணத்தை விடுவித்து இருப்பது, வேதனையாக உள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

\n

\n

ஒரே ஆழ்துளைக்கிணற்றில் ஒருபுறம் நாயக்கன் பேட்டை ஊராட்சிக்கும் மற்றொரு புறம் வில்லிவலம் ஊராட்சி குடிநீர் பணிக்கும் என ஒரே திட்டத்திற்கு இரு விதமான நிதி ஒதுக்கீடு என எழுதப்பட்டுள்ளது கண்டு அப்பகுதி மக்களிடையே மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டது.

\n

\n

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments