Thursday, December 18, 2025
Homeபூந்தமல்லியில் கஞ்சா எடுத்து சென்ற இரண்டு பேர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

பூந்தமல்லியில் கஞ்சா எடுத்து சென்ற இரண்டு பேர் கைது 12 கிலோ கஞ்சா பறிமுதல்.

தடை செய்யப்பட்ட கஞ்சா பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து எடுத்து செல்லப்படுவதாக பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு வந்த தகவலையடுத்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

\n

இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து வெளியூர் செல்லக்கூடிய பேருந்து நிலையத்திலிருந்து கஞ்சா எடுத்து செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்த மதுவிலக்கு போலீசார் கண்காணித்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

\n

\n

இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை செய்தபோது பிடிபட்டவர்கள் தூத்துக்குடியை சேர்ந்த சுடலை மணிகண்டன்(23), திருநெல்வேலியை சேர்ந்த முத்துராஜ்(45), என்பதும் இருவரும் வெளி மாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா எடுத்து வந்து பின்னர் பூந்தமல்லி வழியாக பேருந்து மூலம் வெளி மாவட்டங்களுக்கு கஞ்சாவை எடுத்து சென்றது தெரியவந்தது.

\n

இவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments