திகன நகரில் ஏற்கனவே உள்ள மதுபான சாலைகளுக்கு மேலதிகமாக, மற்றுமொரு மதுபான சாலையை தினக- மடவல வீதியில் திறப்பதை எதிர்த்து பிரதேச பௌத்த தேரர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். அதற்கு எதிராக பிரிதொரு குழுலினரும் ஆர்பாட்டம் செய்தனர்.
\n
ALSO READ | தென்னை மரங்களை வேரோடு பிடிங்கி எரிந்த காட்டு யானைக் கூட்டம்.
\n
\n
\n
இவ் ஆர்பாட்டம் மதுபானக் கடைக்கு முன்பாக இடம் பெற்றது. கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரத்தை வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாகவும் அவ் வர்த்தகரே புதிய மதுபான விற்பனை சாலையை திறக்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
\n
\n
எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில், மதுக்கடைக்கு ஆதரவாகவும் சிலர் அங்கு வந்து அதனைத் திறப்பது தொடர்பாக ஆதரவு தெலித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
\n
தெல்தெனிய, பல்லேகல மற்றும் மெனிக்கின்ன பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த மேலதிக பொலீசார் ஸ்தலத்துக்கு அழைக்கப்பட்டனர். பின்னர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
\n
ALSO READ | உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு உதகையில் உள்ள சுற்றுலா தலங்களில் குவிந்த சுற்றுலா பயணிகள்.
\n
\n
\n
