காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் விபிஆர் சத்திரம் பகுதியில் பிரபல சத்தியம் கிராண்ட் என்ற தங்கும் விடுதி உள்ளது. சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த பிரபல ஓட்டலில் முக்கிய பிரமுகர்கள் கட்சிகளின் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். \r\n\r\nஅதிக மக்கள் வந்து போகும் இடமான இந்த இடத்தில் எப்போதும் கழிவுநீர் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.\r\n\r\nஇன்று காலையில் எந்த விதமான பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மூன்று நபர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ய முற்பட்டனர்.\r\n\r\nஒன்றன்பின் ஒன்றாக கழிவுநீர் தொட்டியில் இறங்கிய நபர்கள் மீது விஷவாய்வு தாக்கியதில் மூவரும் கழிவுநீர் தொட்டியில் நீரில் மூழ்கி மாயமானர்.\r\n\r\nஇந்த தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இவர்களின் உடலை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\r\n\r\nசுமார் 50,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த கழிவுநீர் தொட்டியில் கழிவுநீர்களை முற்றிலும் அகற்றிவிட்டால் தான் இவர்களின் உடலை மீட்க முடியும் என கூறப்பட்டுள்ள நிலையில் தற்போது நவீன் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. \r\n\r\nமேலும் கட்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன் 51 , திருமலை 18 ஆகியோரின் உடல் தேடப்பட்டு வருகிறது.\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.
