Thursday, December 18, 2025
Homeகம்பெனியை லாக் அவுட் செய்த நிறுவனத்தின் முன்பு ஒரு வாரமாக போராடி வந்த தொழிலாளர்களில் ஓருவர்...

கம்பெனியை லாக் அவுட் செய்த நிறுவனத்தின் முன்பு ஒரு வாரமாக போராடி வந்த தொழிலாளர்களில் ஓருவர் குளிக்கும்போது நீரில் மூழ்கி இறப்பு.

காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகுளம் அடுத்த இலுப்பப்பட்டு ஊராட்சியில் இண்டோ டெக் டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. 

\n

மின் ஊக்கிகள் உற்பத்தி செய்யப்படும் இந்த தொழிற்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் பணிபுரிந்து வருகின்றார்கள்.

\n

இந்நிலையில், நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகின்றது , அதனால் தொழிலாளர்களுக்கு வேலை அளிக்க முடியாது என கூறி, கடந்த வாரம் இண்டோ டெக் டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நிர்வாகத்தினர் மூடி விட்டார்கள்.

\n

\n

வேலை போய்விட்டதே என்ற கவலையில் தொழிலாளர்கள் தினந்தோறும் கம்பெனி நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

\n

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சுமார் 106.5 டிகிரி வெப்பம் காணப்பட்ட நிலையில் தொழிலாளர்கள் உடல் சூட்டை தாங்க முடியாமல் ராஜகுளம் அருகே உள்ள குளத்தில் சென்று குளித்தனர்.

\n

35 தொழிலாளர்கள் குளித்துக் கொண்டிருந்தபோது திருவள்ளுவர் மாவட்டம் திருமழிசை பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 45) என்ற ஊழியர் நீண்ட நேரமாக குளத்தை விட்டு வெளியே வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த மற்ற தொழிலாளர்கள் சுந்தரமூர்த்தியை குளத்தில் தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்காததால் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்துக்கும் தீயணைப்பு துறை அதிகாரிக்கும் தகவல் அளித்தனர்.

\n

\n

தகவலின் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுந்தரமூர்த்தியின் உடலை சுமார் 3 மணி நேரமாக குளத்தில் தேடி வந்தனர். சுந்தரமூர்த்தியின் உடலை கண்டறிய முடியாதாலும் , இரவு நேரம் என்பதாலும் தேடும் பணியை நிறுத்திவிட்டு இரண்டாவது நாளாக இன்று காலை குளத்தில் இறங்கி தேடும்போது சுந்தரமூர்த்தியின் உடலை கண்டறிந்து கரைக்கு கொண்டு வந்தனர். 

\n

வேலை போய் விட்டதே என்ற கவலையில் சுந்தரமூர்த்தி தொடர்ந்து காணப்பட்டு வந்ததாகவும், நேற்று நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வெப்ப சூட்டை தணித்துக் கொள்ள குளத்தில் இறங்கிய போது சுந்தரமூர்த்தி மட்டும் மிகுந்த தயக்கத்துடன் குளத்தில் இறங்கிய தாக கூறப்படுகிறது. 

\n

ஒருவிதமான சோகத்துடன் காணப்பட்ட சுந்தரமூர்த்தி , வேலை பறிபோனதுக்காக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது நீரில் மூழ்கி இறந்து போனாரா என்ற கோணத்தில் தாலுகா காவல்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.

\n

\n

தீயணைப்பு துறையினர் நேற்று மோட்டார் வைத்த படகுமூலம் குளத்தில் இறங்கி சுந்தர மூர்த்தியின் உடலை தேடலாம் என முடிவெடுத்தபோது மோட்டார் இயங்காததால் படகை துடுப்பு போட்டு கொண்டு பலகை செலுத்தினர். இதனால் மிகுந்த காலதாமதம் ஏற்பட்டது . அதனால் நேற்று சுந்தரமூர்த்தியின் உடலை கண்டறிய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

\n

இதேபோல் மூன்று நாட்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் அருகே தீப்பிடித்து எரிந்த போது அதை அணைக்க சென்ற தீயணைப்பு வாகனம் செயல்படாததால் பனை ஓலையை வைத்துக் கொண்டு தீயை அணைக்க முற்பட்டது குறிப்பிடத்தக்கது.

\n

பேரிட மேலாண்மைக்கு மிக முக்கியமானது தீயணைப்பு துறை. தீயணைப்புத் துறை இடம் எந்த உபகரணம் கண்டிஷனாக இல்லாததால் தீ பிடித்தால் உடனே அணைக்க முடியவில்லை. அதேபோல் நீரில் மூழ்கியவர்களை உடனே காப்பாற்றவும் முடியாத நிலையில் உபகரணங்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments