கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட விலை பொருட்களுக்கான 80 லட்சத்திற்கு மேல் பணத்தை வியாபாரிகள் கையாடல் செய்ததால் 300 க்கும் மேற்ப்பட்ட விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை கொடுக்காமல் 5மாதத்திற்கு மேல் அலைக்கழிக்கப்பட்டதால் கடந்த மாதம் 19 ஆம் தேதி ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டதாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ள தகவல் பலகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.\r\n\r\nஇதனையடுத்து ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளிடம் பெறப்பட்ட விளைப் பொருட்களுக்கான நிலுவைத்தொகை 80 லட்சத்திற்கும் மேல் கையாடல் செய்த நான்கு பேர் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர் இதில் வெங்கடேசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் மேலும் 3 பேர் தலைமறைவாக உள்ளதால் போலீசார் தேடி வருகின்றனர்.\r\n\r\nஇந்நிலையில் ஒரு மாதத்துக்கு மேல் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூடப்பட்டிருந்த நிலையில்\r\nஇன்று உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ.மணிக்கணன் தலைமையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. \r\n\r\nஆலோசனைக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் பேசுகையில் விவசாயிகளிடம் பெறப்பட்ட விலை பொருட்களுக்கான நிலவுத் தொகை 15 நாட்களுக்குள் திரும்ப கொடுக்கப்படும் எனவும் மூடப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடம் நாளை முதல் திறந்து விவசாயிகளிடம் உள்ள விலைப் பொருட்களை கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறினார்.\r\n\r\nஇதனை அடுத்து தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் கண்டுபிடிக்கும் விதமாக உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் தெரிவிக்கப்பட்டு உளுந்தூர்பேட்டையில் உள்ள முக்கிய இடங்களில் மூன்று பேர் புகைப்படங்கள் கூடிய விளம்பரங்கள் ஒட்டப்பட்டு கண்டுபிடிக்கப்படும் எனவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற குளறுபடிகள் மற்றும் பண மோசடி போன்ற செயல்கள் இனி வரும் காலங்களில் நடக்காது எனவும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்படும் விலைபொருட்களுக்கான பணம் 3 நாட்களுக்குள் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.\r\n\r\nநிகழ்ச்சியில் நகராட்சி மன்ற துணை தலைவர் U.S.வைத்தியநாதன் ஒழுங்குமுறை விற்பனை கூட செயலாளர் ரவி மற்றும் வியாபாரிகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் முகமது ஹனி கலந்து கொண்டனர் ஆலோசனைக் கூட்டத்திற்கு விவசாயிகளுக்கு தகவல் கொடுக்கப்படாததால் விவசாயிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை.\r\n\r\nஉளுந்தூர்பேட்டை செய்தியாளர்.\r\nபிச்சை.உதயகுமார்
