Thursday, December 18, 2025
Homeராணிப்பேட்டை சிப்காட்டில் மேல் நிலை நீர் தொட்டியிலிருந்த குடிநீரில் மலம் கலந்த நாற்றம் வீசியதாக ஆவேசத்தில்...

ராணிப்பேட்டை சிப்காட்டில் மேல் நிலை நீர் தொட்டியிலிருந்த குடிநீரில் மலம் கலந்த நாற்றம் வீசியதாக ஆவேசத்தில் பொதுமக்கள் திரண்டதால்  பரபரப்பு.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த நவ்லாக் ஊராட்சி சார்பில். சிப்­காட் வ.உ.சி. நகரில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ98 லட்சத்தில் 66 ஆயிரம் லிட்டர் கொள்ளளவிலான மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி கடந்த 1998 ல் கட்டப்பட்டு அதிலிருந்து குடிநீர், வ.உ.சி. நகர் அண்ணாசாலை , எம்ஜிஆர் நகர் , திருவள்ளுவர் நகர் , நேதாஜி நகர் மற்றும் அருகிலுள்ள 8 தெருக்களில் வசித்து வரும் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

\n

இந்நிலையில் வழக்கம் போல மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து சப்ளை செய்யப்பட்ட குடிநீரை பிடித்த போது அதிலிருந்து மலம் கலந்த துர்நாற்றம் வீசியதா கவும் உடனே சிலர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியுள்ள இடத்திற்கு சென்று அதன் மேல் ஏறி பார்த்த்தில் விலங்குகளின் அசுத்தம் கிடந்ததாக தெரிகிறது.

\n

\n

இதற்கிடையில் குடிநீர் தொட்டியில் மனித மலம் கலந்திருப்பதாக வதந்தி பரவியதால் அப்பகுதியினர் ஆவேசத்துடன் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

\n

இதுகுறித்து தகவலறிந்த சப்கலெக்டர் மனோன்மணி, ஏ டி எஸ் பி குமார் அங்கு விரைந்து அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது பொதுமக்கள் மேல்நிலை நீர் தேக்க தொட்டி தூய்மைப் படுத்துவதில்லை ஆங்காங்கே தொற்று நோய்கள் பரவி வருகிறது .

\n

இனியாவது அதிகாரிகள் தொடந்து ஆய்வு செய்து சுத்தமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

\n

\n

இதனையடுத்து மேல்நிலை நீர் தேக்க தொட்டி சுத்தம் செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டவரை தவிர மற்ற வர்கள் மேலே செல்லாமல் இருக்க கதவுகள் அமைத்து பூட்டு போட்டு பராமரிக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து

\n

மேல்நிலை நீர் தேக்கை தொட்டியினை சுத்தம் செய்யும் வரை மக்களுக்கு குடிநீர் லாரிகளில் இலவசமாக எடுத்து வந்து தரப்படும் எனவும் அதிகாரிகள் கூறினர்

\n

பின்னர் அமைதியான முறையில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments