கடந்த சனிக்கிழமை அன்று உடல்நல கோளாரால் அவதிப்பட்டு வந்த (உத்திரமேரூர் வட்டாசியர் அலுவலகத்தில் மசால்சி பணி செய்யும் அரசு பெண் ஊழியர்) தாட்சாயினி என்ற பெண்மணி காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையின் பழைய பிரசவ வார்டின் இரண்டாவது மாடியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். \r\n\r\nதாட்சாயினி ஓரளவு குணமான நிலையில் பணியில் இருந்த மருத்துவர் இன்று காலை 8 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்வதாக கூறியுள்ளார் . மதியம் 12 மணி ஆகியும் பணியில் இருந்த செவிலியர் சந்திர கலா டிஸ்சார்ஜ் பற்றி எந்த தகவலும் கூறாததாலும், மாத்திரைகள் அளிக்காதாலும் தாட்சாயினியின் அட்டெண்டர் சென்று, செவிலியர் சந்திரகலாவிடம் மாத்திரைகள் கேட்டபோது பார்மசியில் சென்று வாங்கிக் கொள் என கூறிவிட்டார்.\r\n\r\nமாற்றுத்திறனாளியான அட்டெண்டர் வெகு தூரம் நடந்து சென்று பார்மஸியில் மாத்திரைகள் கேட்டபோது மாத்திரைகள் இங்கே கொடுக்க முடியாது வார்டில் சென்று வாங்கிக்கொள் என திருப்பி அனுப்பி விட்டனர்.\r\n\r\nமீண்டும் சந்திர கலாவிடம் மாத்திரைகள் கேட்டபோது நான் இரண்டு மணிக்கு தான் கொடுப்பேன் அதுவரையில் நீங்கள் காத்திருக்க வேண்டும் என தெனாவட்டாக கூறியுள்ளார். \r\n\r\nமேலும் என் ஜி ஓ ஃபார்ம் அளித்தால்தான் டிஸ்சார்ஜ் செய்வேன். என் ஜி ஓ பார்ம் கொடுக்காவிட்டால் டிஸ்சார்ஜை கேன்சல் செய்து விடுவேன், என் ஜி ஓ பார்ம் என்றைக்கு கொடுக்கின்றாயோ அன்றைக்கு தான் டிஸ்சார்ஜ் போடுவேன் என உறுதியாக கூறியதால் தாட்சாயினியிக்கு குழப்பம் ஏற்பட்டது. துணை வட்டாட்சியரிடம் என் ஜி ஓ ஃபார்ம் கேட்டபோது புதன்கிழமை அளிப்பதாக கூறியுள்ளார்.\r\n\r\nஇதை ஏற்றுக் கொள்ளாத செவிலியர் சந்திரகலா 500 ரூபாய் பணத்தை கொடு ,அப்போது தான் டிஸ்சார்ஜ் செய்வேன் . என்னைக்கு என் ஜி ஓ பார்ம் கொடுக்கின்றாயோ அன்னைக்கு இந்த 500 ரூபாய் பெற்றுக் கொள் என தாட்சாயனிடம் கடுகடுத்துள்ளார். \r\n\r\nமிகவும் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள தாட்சாயணி , என்னால் தற்போது பணம் அளிக்க இயலாது, என் உடல்நிலை சரியான பின்னர் என்னுடைய அலுவலகத்தில் இருந்து என் ஜி ஓ பார்ம் வாங்கி தருகின்றேன் எனக் கூறியதை செவிலியர் சந்திரகலா ஏற்றுக்கொள்ளவில்லை.\r\n\r\nதாட்சாயினி நமது செய்தியாளருக்கு தகவல் அளித்ததின் பேரில், தாட்சாயின் செல்பேசி மூலம் நமது செய்தியாளர் சந்திரகலாவிடம் தொடர்பு கொண்டு 500 ரூபாய் வாங்குவதற்கு ரசீது கொடுப்பீர்களா? தமிழக அரசு அரசாணை ஏதாவது வெளியிட்டுள்ளதா என கேட்டுள்ளார்.\r\n\r\nஇந்த தகவலை மருத்துவமனையின் கண்காணிப்பாளராக (பொறுப்பு) உள்ள கல்பனாவிடம் போன் செய்து, செய்தியாளர் போனில் என்னை மிரட்டுகிறார் என அழுது கொண்டே கூறியதால், செய்தியாளர் மிரட்டுகின்றார் என நாம் புகார் கொடுப்போம் கவலைப்படாதே என பேசி செவிலியர் செய்த தப்புகளை ஊக்குவித்துள்ளார்.\r\n\r\nஅதுமட்டுமன்றி அந்தப் பெண் கூலி தொழில் செய்கின்றார் என எழுதி வாங்கி வரச்சொல். இல்லாவிட்டால் 500 ரூபாய் பணத்தை வாங்கி கொண்டு விரட்டிவிடு என ஓபன் ஸ்பீக்கரில் பேசியுள்ளார். நோயாளி பெண்ணை விரட்டி விடு எனக் கூறியதை கேட்ட தாட்சாயினுக்கு மேலும் மன அழுத்தம் அதிகமாகி காய்ச்சல் வந்து விட்டது. \r\n\r\nதீர விசாரிக்காத கண்காணிப்பாளர் கல்பனா மீது சென்னை DMS அலுவலகத்தில் ஏராளமான புகார்கள் உள்ளது. அதேபோல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் நடந்து கொண்டுள்ள ஆடிட்டிங்கில் கூட பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.\r\n \r\nநோயாளியான தாட்சாயணி ஏற்கனவே மனக்கஷ்டத்திலும் பணக்கஷ்டத்திலும் உள்ளார். மசால்சி வேலை செய்யும் பெண்ணிடம் 500 ரூபாய் கட்ட பணம் இல்லை. இந்த நிலையில் ஒரு நோயாளியை இப்படி அலைக்கழிப்பது நியாயமா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றார்கள்.\r\n\r\nஇது தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ண குமாரி அவர்களிடம் கேட்ட போது , அறுவை சிகிச்சை போன்ற *அதிக செலவாகும் நோய்களுக்கு அரசு ஊழியர்கள் என் ஜி ஓ பார்ம் அளிப்பது அவசியம்.*\r\n\r\nமற்றபடி *சாதாரண வயிற்று வலி போன்ற உடல் உபாதைகளுக்கு NGO FORM அளிப்பதில் விலக்கு* அளிக்கலாம், இல்லாவிடில் பிறகு கூட submit பண்ணலாம். \r\n\r\nஅரசு அலுவலகங்கள் விடுமுறையில் இருக்கும் போது *அரசு பணியில் உள்ள நோயாளிகளிடம் முழு விலாசத்தை பெற்றுக்கொண்டு அவர்களை டிஸ்சார்ஜ் செய்யலாம்*.\r\n\r\nநோயாளிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுத்துவது போல நடந்து கொள்வதை மருத்துவமனையில் பணிபுரிபவர்கள் அனைவரும் அவசியம் தவிர்க்க வேண்டும் என கூறி தாட்சாயணி என்ற பெண்மணிக்கு என் ஜி ஓ பார்ம் பிரச்சனையில் இருந்து விலக்களித்து டிஸ்சார்ஜ் செய்ய உதவியுள்ளார்.\r\n\r\nவட்டாசியர் அலுவலகத்தில் மசால்சி பணி செய்யும் அரசு பெண் ஊழியர் நோயாளி தாட்சாயிணியை 500 ரூபாய் பணம் அளித்தால் தான் டிஸ்சார்ஜ் போடுவேன் அல்லது “கூலி வேலை” செய்கிறேன் என போர்ஜரி கடிதம் வாங்கி வாங்கி வாருங்கள் என செவிலியர் சந்திரலேகாவிடம் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஓபன் ஸ்பீக்கரில் பேசியது அங்குள்ள நோயாளிகள் மற்றும் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .\r\n\r\nமருத்துவமனை கண்காணிப்பாளர் கல்பனாவின் நிர்வாகக் கோளாறு காரணமாகதான் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த 35 லட்ச ரூபாய் மதிப்புள்ள இன்வெர்ட்டர் திருடு போனது . ஆக்சிஜன் பிளாண்ட்டில் இருந்த காப்பர் வயர்கள் திருடு போனது. ஒப்பந்த ஊழியிடம் பாலியல் சீண்டல், வளாகத்தில் கஞ்சா மறைத்து வைத்தல் , கஞ்சா புகைப்பது, மதுபானம் அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்கள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெறுகின்றது. \r\n\r\nசீரான ஆக்சிஜன் அளிக்காததால் இரண்டு உயிர்கள் இறந்து போனது போன்ற பல விதமான கோளாறுகள் நடைபெற்று திறமையற்ற நிர்வாக சிக்கல்களை கண்ணாடி போல படம் பிடித்து காண்பிக்கின்றது. \r\n\r\nபேட்டி. தாட்சாயினி – வட்டாட்சியர் அலுவலகத்தில் மசால்சி பணி புரிகின்றார்.\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.
