தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மறைந்த சுதந்திர போராட்ட தியாகி நாடிமுத்து பிள்ளை மற்றும் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஜி கே வாசன் நாடிமுத்து பிள்ளை மற்றும் \r\nபசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.\r\n\r\nபின்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் நலிவடைந்த தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் இஸ்ரோவுக்கு செல்ல இருக்கும் அரசு பள்ளி மாணவிகள் மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியைக்கு பொன்னாடைகள் போர்த்தி நினைவு பரிசை வழங்கினார்.\r\n\r\nபின்பு செய்தியாளரிடம் பேசிய ஜி கே வாசன் கூறும்போது.\r\n\r\nமத்திய அமைச்சர்கள் தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி தமிழகத்தில் ஆய்வு செய்ததில் எந்த தவறும் இல்லை என்றும் மத்திய அரசின் செயல் திட்டங்களை முறையாக செயல்படுகிறதா என தமிழகத்தில் ஆய்வு செய்தது வரவேறத்தக்கது \r\nஎன்றும் கோவை சம்பவத்தில் NIA\r\nவிசாரணை தொடங்கியிருக்கும் நிலையில் ,\r\n\r\nஉண்மை சம்பவங்கள் வெளிவரும் என்றும் தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை என்றும் எனவே தமிழக அரசு உளவுத்துறை பணியில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும்.\r\n\r\nபட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.\r\n\r\nஆர்.ஜெயச்சந்திரன்
