Saturday, December 6, 2025
Homeதேவாரம் அருகே கத்திரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயி டிராக்டர் கொண்டு கத்தரிக்காயை உழுது அழிக்கும் விவசாயி.

தேவாரம் அருகே கத்திரிக்காய் விலை வீழ்ச்சியால் விவசாயி டிராக்டர் கொண்டு கத்தரிக்காயை உழுது அழிக்கும் விவசாயி.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் கிராமத்தில் மூன்று ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கத்தரிக்காய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் விவசாயி டிராக்டர் கொண்டு அழித்து வருகிறார்.

\n

இதனால் ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை நஷ்டம் என விவசாயி வேதனையுடன் தெரிவிக்கிறார். இரண்டு முறையும் கத்தரிக்காய் பயிரிட்டு நான் நஷ்டம் அடைந்தது தான் மிச்சம்.

\n

\n

கடுமையான கோடை வெப்பத்தின் காரணமாக கத்திரிக்காய் முழுவதும் செடியிலேயே வெம்பி பழுத்த நிரத்திலும் அழுகிய நிலையிலும் கிடைக்கிறது. இதனை எவ்வாறு விற்பனை செய்ய முடியும் வருகிற வியாபாரிகள் பார்த்துவிட்டு வேண்டாம் என கூறுகின்றனர்.

\n

விவசாயி தெரிவிக்கையில் கடந்த இரண்டு முறை கத்தரிக்காய் பயிரிடப்பட்டும் எந்தவித பலனும் எனக்கு கிடைக்கவில்லை. என வேதனையுடன் தெரிவிக்கின்றார்.

\n

\n

நான் பயிரிடப்பட்டு செலவு செய்த தொகை கூட கிடைக்காமல் மிகுந்த மன வேதனையுடன் டிராக்டர் கொண்டு அழிக்கப்பட்டு வருகிறது.

\n

தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் கத்திரிக்காய் விவசாயத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விலை நிர்ணயம் செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments