தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, இராஜகிரி அம்பேத்கர் தெருவில் வசிப்பவர் இளையராஜா (42) சுமத்ரா (38) தம்பதியினர்.
\n
இவர்களுக்கு திருமணம் ஆகி சுமிதாஶ்ரீ (22), விஜயபிரபாகரன் வயது (20) என்ற இரண்டு பிள்ளைகள் இருந்து வருகின்றனர்.
\n
\n
\n
\n
\n
இந்த நிலையில் இளையராஜா எலக்ட்ரிஷன் மற்றும் பிளம்பர் வேலை செய்து வருகிறார். இவர் இராஜகிரி அருகே பார்வதிபுரம் பகுதியில் ஸ்ரீதரன் என்பவரது வீட்டில் மின் மோட்டார் பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.
\n
அப்பொழுது எதிர்பாராத விதமாக மின்சாரம் இளையராஜா மீது மின்சாரம் பாய்ந்தது.
\n
ALSO READ | சங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு தடை
\n
\n
\n
இதில் மயக்கம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
\n
இளையராஜாவை பரிசோதித்த மருத்தவர்கள் இவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
\n
\n
\n
தகவல் அறிந்து விரைந்து வந்த பாபநாசம் போலீசார் மேற்படி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

\n