கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை சாமிநாத சுவாமி திருக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும் ஓம் எனும் பிரணவ மந்திரத்தை தந்தை சிவபெருமான உபதேசத்தால் இவர் சுவாமிநாத சுவாமி என்ற போற்றப்படுகிறார்.\r\n\r\nஇவ்வாலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்து தினங்கள் கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம் இவ்வாண்டுக்கான கந்த சஷ்டி விழா கடந்த 25ஆம் தேதி தொடங்கியது தினமும் காலை மாலை இருவேளைகளில் சாமி வீதி உலா நடைபெற்றது.\r\n\r\nஇன்று மூலவர் சாமிநாத சாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் தீபாராதனைகள் நடைபெற்றது அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.\r\n\r\nஇதனைத் தொடர்ந்து உற்சவருக்கு 108 சங்க அபிஷேகம் நடைபெற உள்ளது மாலை பராசக்தியிடம் சண்முகர் வேல் வாங்கி சூரசம்கார நிகழ்ச்சி நடைபெறுகிறது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
