கும்பகோணம் அருகே திருப்பனந்தாளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் கடன் வழங்கும் சிறப்பு முகாம் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், தலைமையில் நடைபெற்றது. \r\n\r\nஇந்த முகாமை மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். சிறப்புரையாற்றி பொதுமக்களிடம் கடன் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார். \r\n\r\nதொடர்ந்து அரசு தலைமை கொறடா கோவி செழியன் கலந்து கொண்டு பேசுகையில் முகாமில் பொது கால கடன்திட்டம், சிறுதொழில் வியாபாரம், பெண்களுக்கான சிறு கடன் வழங்கும் திட்டம், சுயஉதவிக்குழு தனிநபர்கடன்\r\nபுதிய பொற்காலத் திட்டம்,கறவை மாடு கடன் திட்டம், இளம் தொழிற்கல்வி பட்டதாரிகளுக்கு சுயத்தொழில் தொடங்க கடன் திட்டம், நெசவாளர் மற்றும் சிறுபான்மை மக்களுக்கான\r\nகடன் வழங்கும் திட்டங்களுக்கு ரூ.7 கோடியே 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\r\n\r\nஇதுவரை ரூ.30 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டுள்ளது. என்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உரிய முறையில் பரிசீலனை செய்து அனைவருக்கும் கடன் வழங்கப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார். \r\n\r\nஇந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் தேவிரவிச்சந்திரன், ஒன்றிய துணை பெருந் தலைவர் கோ.க. அண்ணாதுரை பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின் \r\nபேரூராட்சி துணை தலைவர் கலைவாணி சப்பாணி முகாமில் சிறுபான்மையூர் பிற்படுத்தப்பட்டோர் மாவட்ட திட்ட அலுவலர் ரேணுகா தேவி, \r\n\r\nகண்காணிப்பாளர் சமத்துவ ராஜா\r\nபேரூராட்சி செயல் அலுவலர் சின்னதுரை, திமுக பிரதிநிதிகள் மிசா மனோகரன், குமார், சாமிநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாலகுரு, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், மகேஸ்வரி அருள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
