அக்.30:- இன்று (அக்டோபர்.30) தெய்வீகத் திருமகன் முத்துராமலிங்க தேவரின், 115 -ஆவது ஜெயந்தியை முன்னிட்டு, திருநெல்வேலி புறநகர் மாவட்டம், பணகுடி பேருந்து நிலையத்தில், தேவரின் திருவுருவப்படத்திற்கு, தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு மற்றும் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா. ஞான திரவியம் ஆகியோர், “மலர் “தூவி ,”மரியாதை” செய்தனர். \r\n\r\nநிகழ்ச்சியில், பணகுடி பேரூர் திமுக செயலாளர் வி. டி. தமிழ்வாணன் , கட்சியின், மாவட்ட பிரதிநிதிகள் மு .க .மாணிக்கம், வீ. அசோக்குமார், நகர அவைத்தலைவர் மாடசாமி, பணகுடி பொது கூட்டுறவு பண்டகசாலை தலைவர் தங்கசாமி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன், மகளிர் அணி தலைவியும், \r\n\r\n8-ஆவது வார்டு திமுக கவுன்சிலருமான, ஆனந்தி , கிளை செயலாளர்கள் வெள்ளச்சாமி, எல். கே. கணேசன், ராஜா, அந்தோணி, ஒன்றிய பிரதிநிதி கோபால், செயற்குழு உறுப்பினர் சுதாகர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
