Saturday, December 6, 2025
Homeகும்பகோணத்தில் சாலையோர வியாபாரி சுரண்டு விழுந்து மரணம். கோடை வெயில் தாக்கம் காரணமா?

கும்பகோணத்தில் சாலையோர வியாபாரி சுரண்டு விழுந்து மரணம். கோடை வெயில் தாக்கம் காரணமா?

கும்பகோணம் அருகே சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (48) , இவர் கும்பகோணத்தில் பாலக்கரை பகுதியில் தரைக் கடை அமைத்து மாங்கா வியாபாரம் செய்து வந்துள்ளார்.

\n

இந்நிலையில் இன்று கொளுத்தும் வெயிலில் மாங்காய் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த அவர் சிறிது நேரத்திற்கு முன்பு திடீரென சுருண்டு மயங்கி விழுந்துள்ளார்.

\n

\n

அவரை அங்கிருந்த வியாபாரிகள் மீட்டு அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

\n

கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக அவர் உயிரிழந்தாரா அல்லது அவருக்கு உடலில் வேறு ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என பிரேத பரிசோதனைக்கு பிறகு தெரியவரும் என மருத்துவர்கள் மற்றும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments