Thursday, December 18, 2025
Homeலுணுகலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

லுணுகலை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு 

லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கேல்வத்தை கும்புக்கன் ஓய ஆற்றில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். 

\n

\n

குறித்த நபர் 65 வயதுடைய மெதபத்தன பிஸ்ஸகம ஹொப்டன் பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

\n

நேற்றில் இருந்து குறித்த நபரை காணவில்லை என அவரின் மனைவியினால் லுணுகலை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

\n

\n

அதனை தொடர்ந்து பொலிஸாரும் உறவினர்களும் ஊர் மக்களும் இணைந்து தேடுதலை மேற்கொண்ட போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

\n

நீதிவான் பார்வையிடுவதற்காக தற்போது சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் சட்ட வைத்திய பரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

\n

\n

மேலதிக விசாரணைகளை லுணுகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

\n

 

\n

 

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments