தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியூர்களுக்கு செல்வதற்காக பேருந்தில் ஏறி மற்றும் இறங்கிய வண்ணம் உள்ளனர்.
\n
இந்த நிலையில் பேருந்துக்காக பயணிகள் காத்திருக்கும் பேருந்து நிலையத்தை ஒட்டி மழை நீர் வடிகால் வாரியம் பள்ளம் தோண்டப்பட்டு, பயணிகள் அதை தாண்டி செல்ல முடியாத நிலையில், அடிக்கும் கத்தரி வயலில் குழந்தைகளுடனும், மற்றும் தள்ளாத வயதில் முதியவர்களும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
\n
\n
\n
\n
\n
பயணிகளை ஏற்றி செல்வதற்கு பேருந்துகள் நிற்பதற்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பேருந்து நிற்கும் போது சாலைகளில் போக்குவரத்து இடையிலும் ஏற்பட்டு பயணிகள் அனைவரும் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
\n
ALSO READ | அரசு மதுபானக்கடையில் சிறுவர்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை
\n
\n
\n
ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அய்யம்பேட்டை பேருந்து நிலையத்தில் தோண்டப்பட்ட வடிகால் வாரிய சம்பந்தமாக தோண்டப்பட்ட பள்ளத்தின் பணிகளை விபத்து ஏற்படும் முன்பு பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன் கருதி உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என பொதுமக்களும் பயணிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.
\n
\n
\n

\n