Saturday, December 6, 2025
Homeபொதுமக்கள் போராட்டம் அறிவிப்பு  தங்கச்சி மடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்

பொதுமக்கள் போராட்டம் அறிவிப்பு  தங்கச்சி மடத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி தீவிரம்

ராமேஸ்வரம் அருகே‌ உள்ள தங்கச்சிமடம் ஊராட்சி இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த மின்சாரம் இருந்தது

\n

இதனால் பொதுமக்களின் வீடுகளில் உள்ள மின்சாதனப் பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது

\n

மேலும் மின் சாதனப் பொருட்கள்‌ அவ்வப்போது பழுதாகி வருகின்றன  இது குறித்து மின்சார வாரிய அதிகாரிகளிடம்  பல முறை புகார் செய்தும் நேரில் சென்று தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் 

\n

\n

இதை கண்டித்து வருகிற 7 ந்தேதி‌ தங்கச்சி மடம் வர்த்தக சங்கம் மற்றும் பொதுமக்கள் இணைந்து கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக‌ அறிவித்தனர் 

\n

இந்த நிலையில் மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் தங்கச்சிமடம் பகுதியில் நேற்று மின்வாரிய அதிகாரிகள் குறைந்த மின்னழுத்த பிரச்சனைகளை சரி செய்வதற்கான‌ முதல் கட்ட பணிகளை தொடங்கினர்.

\n

\n

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக வலசை பகுதியில் இருந்து வரும் டிரான்ஸ்பார்மரை அகற்றி விட்டு புதிய டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

\n

போலீஸ் நிலையம் அருகிலும் புதிதாக டிரான்ஸ்பார்மர் பொருத்த திட்டமிட்டுள்ளனர் தங்கச்சி மடத்தில் குறைந்த மின்னழுத்த பிரச்சனை விரைவில் சரி செய்யப்படும் என்றும் மின் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments