Thursday, December 18, 2025
Homeஅகரம்சீகூர் அருகே வாலிகண்டபுரத்தில் சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

அகரம்சீகூர் அருகே வாலிகண்டபுரத்தில் சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்.

Online District News Today

\n

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரம் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக சீரான மின்சாரம் இல்லாததால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு, மின் மோட்டார், மின்விசிறி, செல்போன் சார்ஜர் உட்பட எதையும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாகவும், லோ வோல்டேஜ் மின்சாரத்தால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் மூன்று நாட்களாக வழங்கவில்லை என கூறப்படுகிறது.

\n

 

\n

\n

சீரான மின்சாரம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

\n

கடந்த மூன்று நாட்களுக்கு முன் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மங்களமேடு துணை மின் நிலையத்தில், நேற்று முன்தினம் டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறியதால், சுற்றுவட்டார கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளதாகவும் 

\n

அதன் காரணமாக மங்களமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கிராமங்களுக்கு லோ வோல்ட்டேஜ் முறையில் மின்விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும்,

\n

\n

கிராம மக்கள் சாலை மறியல்

\n

இதனால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலையில், வாலிகண்டபுரம் கிராமத்தில் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக குற்றம் சாட்டி, கிராம மக்கள் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

\n

விளம்பர அரசை கண்டித்து திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

\n

\n

தகவல் அறிந்து வந்த வந்த மங்களமேடு காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர். 

\n

உடனடியாக குறைந்த அழுத்த மின்சாரம் வழங்குவதை நிறுத்தி சீரான மின்சாரம் வழங்காவிட்டால் நாளை மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

\n

இதனால் இப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments