Saturday, December 6, 2025
Homeபிரதமர் மோடி வீட்டில் அவசரமாக கூடும் பாதுகாப்பு துறை கேபினட் கமிட்டி

பிரதமர் மோடி வீட்டில் அவசரமாக கூடும் பாதுகாப்பு துறை கேபினட் கமிட்டி

பாதுகாப்பு துறைக்கான கேபினட் கமிட்டி இன்னும் சற்று நேரத்தில் பிரதமர் மோடி அவர்கள் வீட்டில் கூட உள்ளது.இந்திய விமானப்படை வானூர்தி ஊட்டி அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக இந்த கூட்டம் மாலை 6.30 மணிக்கு கூட உள்ளது.\r\n\r\nஇந்த விபத்தில் ஒருங்கிணைந்த படை தளபதி ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 14 பேர் சிக்கினர்.அவர்கள் தவிர சிடிஎஸ் உதவியாளர் பிரிகேடியர் லித்தர், லெப் கலோ ஹர்ஸிந்தர் சிங், நாய்க் குரூஸ்விக் சிங் ,நாய்க் ஜிதேந்திர குமார், லான்ஸ் நாய்க் விவேக் குமார், லான்ஸ் நாய்க் சாய் தேஜா மற்றும் ஹவில்தார் சத்பால் ஆகியோர் உடனிருந்தனர்.\r\n\r\nமதியம் 12.20 அளவில் இந்த வானூர்தி விபத்துக்குள்ளானது.\r\n\r\nவானூர்தி வானிலேயே தீப்பற்றி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன் பின்பே மரத்தில் மோதியுள்ளது.13 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.\r\n\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments