Friday, December 19, 2025
Homeகாஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, கார்டியாலிஜ்ட் பிரிவுகளில் ஏசி வேலை...

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு, கார்டியாலிஜ்ட் பிரிவுகளில் ஏசி வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் அவதி.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற மற்றும் உள் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

\n

கோடை காலம் துவங்கி வெப்ப சலனம் அதிகம் உள்ள நிலையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சி சி யு எனப்படும் கார்டியாக் கேர் யூனிட், டயாலிசிஸ் பிரிவு, ஐ எம் சி யு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் உள்ள சென்ட்ரலைஸ் ஏசிகள் மற்றும் ஸ்பிலிட் ஏசிகள் வேலை செய்யாததால் நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.

\n

\n

இதே போல மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் அறையில் உள்ள ஏ சி யும் பல மாதங்களாக வேலை செய்யவில்லை. அதேபோல் மருந்துகள் வழங்கப்படும் அறையில் உள்ள ஏசியும் வேலை செய்யாததால் மருந்து உள்ளிட்ட பொருட்கள் அதிக வெப்பத்தால் மாத்திரைகளின் வீரியம் குறைந்து விடும் என நோயாளிகள் அச்சப்படுகின்றனர்.

\n

பல இடங்களில் ஏசி வேலை செய்யாததால் நமது செய்தியாளர் கடந்த 10 தினங்களாக தீவிர சிகிச்சை பிரிவு உள்ளே சென்று செய்தி சேகரிக்க முயற்சித்த போதெல்லாம் மருத்துவமனை ஊழியர்கள் நமது செய்தியாளரை செய்தி எடுக்க விடாமல் தடுத்து கொண்டே வந்தனர்.

\n

டயாலிசிஸ் பிரிவில் சென்று நமது செய்தியாளர் செய்தி சேகரிப்பதை கண்ட மருத்துவமனை நிர்வாகம் டயாலிசிஸ் பிரிவில் உள்ள ஏசிகளை மட்டுமே சீர் படுத்தியுள்ளது. 

\n

\n

கார்டியாக் கேர் யூனிட், தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றில் உள்ள சென்ட்ரலைஸ் ஏசிகளும் ஸ்பிலிட் ஏசிகளும் இந்த வினாடி வரையில் வேலை செய்யாததால் ஏற்கனவே உடல் நலம் அதிகம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் இந்த கடும் வெப்பத்தால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

\n

மருத்துவமனை நிர்வாகமும் இப்போது ரெடியாகிவிடும் அப்போது ரெடியாயிடும் என கூறிக்கொண்டு நாட்களைக் கடத்தி வருவது வேதனையாக உள்ளது என நோயாளிகள் கூறுகின்றனர்.

\n

கடுமையான வெப்ப சலனம் உள்ள நிலையில், நோயாளிகளின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு உடனடியாக ஏசிகளை ரிப்பேர் செய்ய வேண்டும் என நோயாளியின் உறவினர்கள் வேண்டுகோள் விடுகின்றனர்.

\n

\n

மருத்துவமனையில் பணிபுரியும் இந்திரா என்ற ஒரு செவிலியரின் கணவர் ஏசி மெக்கானிக்காக உள்ளார். அவர் பராமரிப்பில் தான் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படுவதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.

\n

எனவே தகுதியான சேவை மனப்பான்மையுடன் உள்ள ஏசி மெக்கானிக்கை ஏசிக்கள் பராமரிக்க நியமிக்க வேண்டும் என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments