பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்று அதிகாலை நபர் ஒருவரினால் தாக்கப்பட்ட நிலையில் பலத்த காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
\n
ALSO READ | கோத்தகிரி அருகே நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்றவர்களை செங் குளவி தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
\n
\n
\n
நேற்று அதிகாலை 2.00 மணியளவில் பதியத்தலாவ சரணகம பகுதியில் வைத்து இராணுவ வீரர் ஒருவரினால் குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.
\n
இதன்போது பலத்த காயமடைந்த பதியத்தலாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மஹியங்கனை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
\n
ALSO READ | புவனகிரி அருகே வாய்க்கால் தூர் வார வந்த ஜேசிபி எந்திரத்தை தடுத்து நிறுத்திய விவசாயிகள்.
\n
\n
\n
குறித்த தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வீரரின் மனைவியும் காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர் மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் பின்னர் அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
\n
\n
\n
\n
\n
