Thursday, December 18, 2025
Homeநெல்லை காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர்  ஜெயக்குமார்...

நெல்லை காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர்  ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நெல்லையில் காணாமல் போன அவரது உடல் உவரியில் கண்டெடுக்கப்பட்டது 

\n

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார்  புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

\n

குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பலர் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

\n

\n

ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

\n

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

\n

\n

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் அரசை வலியுறுத்துகிறது.

\n

சட்டம் தன் கடமையை நியாயமாக செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments