காத்தான்குடி ஒக்சி கார்டன்(பசுமை கழகத்தின்) ஏற்பாட்டில் மாவட்டத்தில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நடும் வேலை திட்டத்தின் கீழ் காத்தான்குடி கப்பல் ஆலிம் வீதியில், பயன்தரும் வீதியோர மரக்கன்றுகள்நடும் நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது.
\n
ALSO READ | ஹைட் சதுக்கத்தில் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இளைஞர் யுவதிகள் அமைப்பினரின் கூட்டம்
\n
\n
\n
இக்கழகத்தின் தலைவர் எம். ஐ.எம்.கமால்தீன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் திரு.U. உதயஸ்ரீதர், காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி.றிப்கா சபீன் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஜநாயக்க, சமூக நலப்பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி ஜவாஹிர், மீரா பள்ளிவாயலின் உபதலைவர் R.A. வஹாப்(JP),Helping Hand நிறுவனத்தின் தலைவர் சிறாஜ், Yasdo அமைப்பின் தலைவர் நிஸ்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்ததோடு அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைத்தனர்.
\n
\n
\n
\n
\n
\n
மரம் வளர்ப்பதின் அவசியம் பற்றியும் எதிர்கால சந்ததியினர் தீய வழியில் சென்று விடாமல் அவர்களை பாதுகாக்கின்ற ஒரு பொழுதுபோக்காகவும் பயனுள்ள ஒரு விடயமாகவும் அமைந்திருப்பதாக இந்நிகழ்ல் கலந்து கொண்ட அதிதிகளது உரைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
\n
ALSO READ | இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்து, காசாவிற்கு கூடுதல் உதவிகளை செய்ய பிளிங்கன் வலியுறுத்தினார்.
\n
\n
\n
மேலும் நகர் பகுதிகளில் காணப்படும் கட்டடங்களின் வெப்பநிலையினை தவிர்த்து சுத்தமான காற்றினை சுவாசிக்க கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்க முடியும் என்ற கருத்துக்களும் பகிரப்பட்டன.
\n
மேற்படி நிகழ்வில் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளுக்கும் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
