சுமார் 08 இலட்சத்திற்கு விற்பனை செய்யமுற்பட்ட இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகநபர் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது .
\n
இரண்டு வலம்புரிச் சங்குகளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் புத்தளம் பிராந்திய பொலிஸ் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
\n
ALSO READ | நீண்ட கால தேவை நிறைவேறியது ஒளியானது சம்புக்களப்பு
\n
\n
\n
இவ்வாறு வலம்புரிச்சங்புகளை ஹோட்டல் உரிமையாளர் ஒருவருக்கு விற்பனை செய்ய உள்ளதாக புத்தளம் மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் திரு.நாலக சில்வாவுக்குக் கிடைக்கெப்பெற்ற தகவலுக்கமைய புத்தளம் பாலாவிப் பகுதியில் வைத்து புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவரால் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
\n
ALSO READ | திருவாரூர் அருகே கார் பைக் நேருக்கு நேர் மோதல் இருவர் பலி
\n
\n
\n
வரக்காப்பொலை பகுதியிலிருந்து இணையத்தளத்தில் முன்பதிவு செய்து (Pickmy) வருகைத் தருமாறு கோரியும் குறித்த முச்சக்கரவண்டிக்கு தான் பணம் செலுத்துவதாகக் கோரி வரவழைக்கப்பட்டுள்ளார்.
\n
இதன்போது குறித்த நபர் வலம்புரிச் சங்குகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
\n
\n
\n
\n
\n
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய திருமணமானவரென்றும் குறித்த நபர் ஓடு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிவதாக விசாரணைகளின் போது பொலிஸார் தெரிவித்தனர்.
\n
கைது செய்யப்பட்ட இரண்டு வலம்புரிகளும் தலா 88 கிராம் மற்றும் 99 கிராம் எடையுள்ளதாகவும், சுமார் 8 இலட்சம் ரூபா ப??றுமதியெனவும் குறித்த இரண்டு வலம்புரிச் சங்குகளும் இடது பக்கம் திரும்பியதற்கான அடையாளம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
\n
ALSO READ | 57 லட்சம் நிதியில் தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரக கோவிலில் சீரமைப்பு பணிகள் தீவிரம்.
\n
\n
\n
கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்குகளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் புத்தளம் பிராந்திய பொலிஸ் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இதன்போது தெரிவித்தனர்.
