Saturday, December 6, 2025
Homeஅத்தி வரதர் வைபவத்தன்று முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக வாங்கப்பட்ட 40 லட்ச மதிப்புள்ள சக்கர நாற்காலிகளை குப்பையில்...

அத்தி வரதர் வைபவத்தன்று முதியோர்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக வாங்கப்பட்ட 40 லட்ச மதிப்புள்ள சக்கர நாற்காலிகளை குப்பையில் தூக்கி வீசிய அதிகாரிகள்.

காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிப்பாக்கம் ஊராட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக கட்டப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பாட்டில் உள்ளது.\r\n\r\nபுதிய கட்டடத்துக்கு பின்புறம் சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகம் தற்போது பயன்பாட்டில் இல்லை. அதில் தேர்தல் நேரத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களும் பர்னிச்சர் போன்ற பொருட்களும் வைத்திருந்தனர்.\r\n\r\nஅது மட்டுமல்லாமல் முதியோர்கள் கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வசதிக்காக அத்தி வரதர் வைபவத்தன்று வாங்கப்பட்ட சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சக்கர நாற்காலிகள் அதில் வைக்கப்பட்டிருந்தது. \r\n\r\nஅத்தி வரதர் வைபவத்திற்க்கு பின்பு அந்த சக்கரநாற்காலிகள் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகள் ,முதியோர்கள் வசதிக்காக வாங்கப்பட்ட அந்த 600 க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் என்று எண்ணி இருந்த நிலையில்,\r\n\r\nபொருட்கள் வைக்கப்பட்டிருந்த பழைய வட்டார வளர்ச்சி அலுவலகத்தை சில நாட்கள் முன்பு யாருடைய அனுமதியும் பெறாமல் திமுக ஒன்றிய குழு கவுன்சிலர் இடித்துதள்ள கூறியதாக தெரிகிறது. அதனைத் தொடர்ந்து பழைய வட்டார வளர்ச்சி கட்டிடம் எந்த அனுமதியும் பெறாமல் இடித்து தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. \r\n\r\nஅந்த கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 600 க்கும் மேற்பட்ட சக்கர நாற்காலிகள் அனைத்தும் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்திலேயே, திறந்த வெளியில் ஒரு மூலையில் எந்த பாதுகாப்பும் இன்றி குப்பை போல் தூக்கி வீசப்பட்டு உள்ளது. வெயில் மழை என தட்பவெட்பம் மாறி மாறி வரும் உள்ள நிலையில் அனைத்து சக்கர நாற்காலிகளும் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் துருப்பிடித்து வீணாகிவிட்டது.\r\n\r\nவீணாகி வரும் சக்கர நாற்காலிகளை, அரசு மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம், கோவில்கள் போன்ற இடங்களுக்கும் முதியோர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் வழங்கலாம்.\r\n\r\nஆனால், யாருக்கும் பயன்படாத வகையில், குப்பை போல் அதிகாரிகள் போட்டு வைத்திருப்பதை, அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் வேதனையோடு பார்த்து செல்கின்றனர். \r\n\r\nஅதிமுக ஆட்சியில் வாங்கிய சக்கர நாற்காலிகளை குப்பத் தொட்டியில் வீசியது போல் வீசி அனைத்தையும் நாசமாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகின்றனர்.\r\n\r\n\r\nகாஞ்சிபுரம் மாவட்ட செய்தியாளர் லட்சுமிகாந்த்.\r\n\r\n\r\n

RELATED ARTICLES

Most Popular

Recent Comments