நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட டிவிடி காலனி பகுதிகளில் காலை 11 மணி ஆகியும் குப்பைகள் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறி கிடக்கும் அவல நிலை,
\n
இதே ரோட்டோரமாக திரியும் நாய்களும் பன்றிகளும் குப்பைகளை இழுத்து ஆங்காங்கே போடுகின்றன
\n
\n
சுட்டெரிக்கும் அக்கினி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில் என்னென்ன தொற்று நோய்கள் பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் வாழும் நிலையில் இந்த குப்பைகளால் அப்பகுதி மக்களை இன்னல்களுக்கு உள்ளாக்குகின்றன
\n
இந்த குப்பைகள் கிடப்பதற்கு எதிர்ப்புறம் பிரபல குழந்தைகள் மருத்துவமனை (கோமதி நர்சிங் ஹோம் )ஒன்று அமைந்துள்ளது
\n
மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று அந்த பகுதி மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்
\n
ALSO READ | கும்பகோணத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிச்சலாக காணப்படும் நெடுஞ்சாலையில் 4 அடிக்கு சாலை உள்வாங்கியதால் பரபரப்பு.
\n
\n
\n
சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் உடனடியாக இதற்கு தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
\n
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் என்றால் அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
\n
\n
\n

\n