கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்குத்திட்டை கிராமத்தில் குறிஞ்சிப்பாடியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து (தடம் எண் 43) மீது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பேருந்தை வழிமறித்து கல்வீசி தாக்கியதில் அரசு பேருந்தின முன்பக்க கண்ணாடிகள் முழுவதுமாக நொறுங்கி உடைந்தன.
\n
\n
அதிர்ஷ்டவசமாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமின்றி உயிர் தப்பினர். பயணிகள் குறைவான அளவில் இருந்ததால் அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.
\n
\n
\n
\n

\n