அக்.29:- திருநெல்வேலி “மாநகராட்சி” நிர்வாகத்தின் கீழ் நெல்லை டவுண் கல்லணை, நெல்லை ஜங்ஷன் மீனாட்சிபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் செயல்பட்டு வரும், மேல்நிலைப் பள்ளிகளில் படித்து, “நீட்” தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை, தூத்துக்குடி, ராநாதபுரம், சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய ஊர்களில் உள்ள, \r\n\r\n”அரசு” மருத்துவக் கல்லூரிகளில், “மருத்துவப்படிப்பு” படிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள, லாவண்யா, கந்தலெட்சுமி, சுப்பு லெட்சுமி, சுகந்தி, முஜிதா பானு மற்றும் புவனேசுவரி ஆகிய “ஆறு” மாணவிகளுக்கும், “மாநகராட்சி ஆணையாளர்” வி.சிவ கிருஷ்ண மூர்த்தி முன்னிலையில், நெல்லை மாநகராட்சி சார்பாக,தலா 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை, ஸ்டெதஸ்கோப் மற்றும் “நினைவுப்பரிசு” ஆகியவற்றை, “மேயர்” பி.எம்.சரவணன் வழங்கி, “நன்றாகப்படித்து, மருத்துவப்படிப்பிலும், நீங்கள் ஒவ்வொருவரும் சிறந்து விளங்கி, திருநெல்வேலி மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும்!” என்று, கேட்டுக் கொண்டார். \r\n\r\nஇந்த நிகழ்ச்சியில், மண்டல தலைவர்கள் “தச்சநல்லூர்” எம்..ரேவதி, “பாளையங்கோட்டை” மா.பிரான்ஸ், 18-ஆவது வார்டு கவுன்சிலர் மு.சுப்பிரமணியன், உதவி ஆணையாளர் (கணக்கு) சொர்ண லதா மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
