திருநெல்வேலி,அக்.22:- திருநெல்வேலி மாநகராட்சி, பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி.திடல், பொலிவுறு நகரம் (SMART CITY) திட்டத்தின் கீழ், பெரும் பொருட்செலவில், புதுப்பிக்கப்பட்டுள்ளது. “சீரமைப்பு பணிகள்” நிறைவு பெற்றுள்ள நிலையில், “திருநெல்வேலி மாநகராட்சி” சார்பில், முதன்முதலாக “கால்பந்து திருவிழா” நடைபெற்றது. \r\n\r\nஇந்த கால்பந்து திருவிழாவில், இன்று (அக்டோபர்.22) பொதுமக்கள் மற்றும் காவல்துறை அணிகள் என, மொத்தம் 16 அணிகள் கலந்து கொண்ட, கால் பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை, மாநகர காவல், சட்டம்- ஒழுங்கு பிரிவு, கிழக்கு மண்டல, “துணை ஆணையாளர்” வி.ஆர்.ஸ்ரீநிவாசன் தொடங்கி வைத்தார். \r\n\r\nஅதனை தொடர்ந்து, காவல்துறை அணியில் ஒருவராக, அவரும் விளையாடினார். நெல்லை காவல்துறை அணி, “கால் இறுதி” மற்றும் “அரை இறுதி” போட்டிகளில் வென்று, “இறுதி” போட்டியில், நுழைந்தது. இதில், பாளையங்கோட்டை, புனித யோவான் கல்லூரி (St.John’s college) அணியுடன், காவல்துறை அணி மோதியது. \r\n\r\nஆட்டத்தின் நிறைவில், 3 -க்கு, 2 என்ற கோல் கணக்கில், காவல்துறை அணி, “வெற்றி” பெற்று கோப்பையை, கைப் நெல்லை கைப்பற்றியது. வெற்றி பெற்ற காவல்துறை அணியை, காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள்,வெகுவாக பாராட்டினர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
