கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்கள், பாலக்கரை – நீலத்தநல்லூர் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இயங்கும் மாணவர் விடுதி தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.\r\n\r\nசுமார் 40 ஆண்டு கால பழமையான கட்டிடத்தில் இயங்கும் இவ்விடுதியில் ஆங்காங்ககே, கட்டிடங்கள் பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளது, குளியறைகள் மற்றும் கழிப்பறைகள் தூய்மை இல்லாமலும், சிமெண்ட் காரைகள் பெயர்ந்தும் மாணவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.\r\n\r\nஅருகில் கழிவுநீர் கால்வாய் உள்ளதால், நாள் முழுவதும் கொசுத் தொல்லையாக இருப்பதாகவும், விடுதியில் வழக்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்றும் இம்மாணவர்கள் குற்றம்சாட்டி, இன்று காலை, பாலக்கரை நீலத்தநல்லூர் சாலையில் அமர்ந்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\r\n\r\nஇதனை தொடர்ந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், கிழக்கு காவல் துறை ஆய்வாளர் அழகேசன் மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். \r\n\r\nஇதில் ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் நேரில் வந்து பார்வையிட்ட பிறகு, விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து மறியல் போராட்டம் தற்காலிகமாக விலகிக் கொள்ளப்பட்டது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
