கும்பகோணம் அருகில் உள்ள திருப்புரம்பியத்தில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது (மினர்வா நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல்) இந்தப் பள்ளியில் கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை அருள்ஜோதி என்பவர், \r\n\r\nவகுப்பில் மாணவர்கள் அதிகம் சத்தம் போடுவதாக கூறி அமைதிப்படுத்தும் நோக்கில் கையில் வைத்திருந்த அளவுகோலால் (ஸ்கேல்) மேஜையை தட்டியுள்ளார்.\r\n \r\nஅப்போது அளவுகோல் உடைந்து வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருந்த இளமாறன் கண்ணில் பட்டுள்ளது.\r\nஇதில் இளமாறனுக்கு பார்வை பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.\r\n\r\nமேலும் இது தொடர்பாக வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாணவனின் தந்தை செழியன் வழக்கு தொடர்ந்தார்.\r\nஇவ் வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று இரவு தீர்ப்பு வழங்கப்பட்டது.\r\n\r\nகும்பகோணம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பொறுப்பு வகிக்கும் பாரதிதாசன் தனது தீர்ப்பில், கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியைக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார். அந்த 30,000 ரூபாயை மாணவனின் சிகிச்சைக்காக வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார் .\r\n\r\nமுப்பதாயிரம் ரூபாய் அபராதம் கட்டத் தவறினால் மூன்று மாத சிறைதண்டனை எனவும் தீர்ப்பு கூறப்பட்டது.\r\n\r\nதஞ்சாவூர் செய்தியாளர் ஆர்.ஜெயச்சந்திரன்.
