Saturday, December 6, 2025
Home, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா! காந்திமதி அம்பாளுக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்!

, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா! காந்திமதி அம்பாளுக்கு, நெல்லையப்பர் காட்சி கொடுத்தார்!

திருநெல்வேலி,அக்.22:- தென்தமிழகத்தில், மிகவும் பிரசித்திபெற்ற சிவாலயமான திருநெல்வேலி அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் அருள்தரும் அன்னை காந்திமதி அம்பாள் திருக்கோயிலின், புகழ்பெற்ற திருவிழாவாகிய ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, இம்மாதம் (அக்டோபர்) 12-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் வெகுவிமரிசையாக தொடங்கியது. \r\n\r\nமொத்தம் 15 நாட்கள் நடைபெறுகிற இத்திருவிழ???வின் முக்கிய நிகழ்வான, சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம், 11-ஆம் திருநாளான இன்று (அக்டோபர்.22) நண்பகலில் நடைபெற்றது. இந்த வைபவத்தை முன்னிட்டு, முன்னதாக நேற்று (அக்டோபர்.21) இரவு, காந்திமதி அம்பாள், சன்னதியில் இருந்து புறப்பட்டு, கம்பை நதி காமாட்சி அம்மன் கோயிலை, சென்று அடைந்தார். \r\n\r\nஅதன் பின்னரே, சுவாமி, அம்பாளுக்கு காட்சி கொடுக்கும், “தபசுக்காட்சி” வைபவம் நடைபெற்றது. ஐப்பசி காட்சி திருநாளான இன்று (அக்டோபர்.22) அம்பாள், ஒரு காலில் தவமிருந்தும், ஜெபமாலையுடன் வெண்பட்டு உடுத்தி, விபூதி அலங்காரத்தில், காட்சி அளித்தார். இதன் பிறகு, காந்திமதி அம்பாள் தங்க சப்பரத்தில் புறப்பட்டு, காட்சி மண்டபத்துக்கு எழுந்தருளினார். \r\n\r\nஅம்மன் சன்னதி வாசலில், நெல்லை கோவிந்தராஜ பெருமாள், திருஞான சம்பந்தர் ஆகியோருக்கு, கம்பை நதியில், விசுவேசுவர லிங்கமாகவும், நீராகவும் சுவாமி நெல்லையப்பர், வெள்ளி ரிஷப வாகனத்தில், காட்சி தந்தார். காட்சி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், புது வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடைபெற்றன. \r\n\r\nதொடர்ந்து, நான்கு ரதவீதிகள் வழியாக, சுவாமியும், அம்பாளும் திருக்கோயிலை வந்து அடைந்தனர். நாளை (அக்டோபர்.23) அதிகாலை 4 மணிக்கு, “ஆயிரங்கால்” மண்டபத்தில் வைத்து, சுவாமி- அம்பாள் “திருக்கல்யாண திருவிழா” நடைபெறுகிறது.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments