திருநெல்வேலி,அக்.23:- நாளை (அக்டோபர்.24) நாடெங்கிலும், “தீபாவளி” பண்டிகை, வழக்கமான உறாசாகத்துடன் கொண்டாடப்பட உள்ள நிலையில், திரூநெல்வேலி கிழக்கு மாவட்டம், “சேரன்மகாதேவி நகர, அனைத்திந்திய அ.தி.மு.க.” (எடப்பாடி அணி) சார்பில், நகர செயலாளர் “வழக்கறிஞர்” பழனிகுமார் தலைமையில், இன்று (அக்டோபர்.23) காலையில், “கட்சி நிர்வாகிகள்” அனைவருக்கும், “தீபாவளி இனிப்புகள்” வழங்கப்பட்டன. \r\n\r\nமுன்னதாக, அவர்கள் அனைவரும், நகர செயலாளர் பழனிகுமார் முன்னிலையில், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, “தமிழக முன்னாள் முதலமைச்சர்கள்” எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின், திருருவப்படங்களுக்கு, “மலர் மாலைகள்” அணிவித்து, “மரியாதை” செலுத்தினர்.\r\n \r\nமாவட்ட இலக்கிய அணி செயலாளர் “கூனியூர்” ப.மாடசாமி, சேரன்மகாதேவி பேரூராட்சி மன்ற, “முன்னாள் தலைவர்” இசக்கி பாண்டியன், கட்சியின், “முன்னாள் அவை தலைவர்” இசக்கிமுத்து, “கூட்டுறவு வங்கி தலைவர்” முருகன் நயினார், அ.தி.மு.க “தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் “மகாராஜன், “இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர்” செல்வகுமார், “வார்டு செயலாளர்கள்” அமர்சிங், கந்தசாமி, முத்து, சிவனு, சவுந்தர்ராஜன், முருகேசன், ஆறுமுக நயினார், குப்புசாமி, இசக்கி, முருகையா பாண்டியன் ஆகியோர் உட்பட, பலர் இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்டனர். \r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
