தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள வேப்பங்காடு வாண்டையார் தெரு மற்றும் அம்பேத்கர் தெரு ஆகிய சாலைகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது மிகவும் குண்டும் குழியுமாக உள்ளதால் அப்பகுதியில் வசித்து வரும் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.\r\n\r\nமேலும் அருகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் கரம்பயம் மாரியம்மன் கோயில் செல்லும் முக்கிய சாலையாகும்.\r\n\r\nஇந்த சாலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் அவசர சிகிச்சை பிரிவுக்கு கூட ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் எடுத்து முறையிட்டும் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.\r\n\r\nஎனவே உடனடியாக தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மிகவும் குண்டும் குழியுமாக உள்ளவாண்டையார் தெரு சாலையை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.\r\n\r\nதஞ்சை செய்தியாளர் ஆர்.ஜெயச்சந்திரன்.
