அக்.27:- திருநெல்வேலி ஜங்ஷன், “மீனாட்சிபுரம்” பகுதியை சேர்ந்தவர் வள்ளிநாயகம். இவர், நெல்லையில் உள்ள காய்கறி கடை ஒன்றில், கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து, வருகிறார். இவருடைய மனைவி பெயர் ஜெயலட்சுமி. இவரும், நெல்லை டவுண் பகுதியில் உள்ள, முறுக்கு கடையில், கூலி வேலை செய்து வருகிறார். \r\n\r\nஇந்த தம்பதியினருக்கு, புவனேசுவரி என்ற மகளும், அய்யம் பெருமாள் என்ற மகனும், உள்ளனர். இதில் புவனேசுவரி, திருநெல்வேலி ஜங்ஷன், மீனாட்சிபுரத்தில் உள்ள, நெல்லை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) படித்து, தேரச்சி பெற்றுள்ளார். தேர்ச்சி பெற்ற கையோடு, இந்த ஆண்டு (2022) “நீட் தேர்வு” எழுதி, மொத்தம் 382 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். \r\n\r\nமருத்துவப்படிப்பு (M.B., B.S) படிப்பதற்காக, “தமிழக அரசு”நடத்திய கலந்தாய்வில் பங்கேற்ற புவனேசுவரி, தமிழக அரசின் 7.5 சதவீத, இட ஒதுக்கீட்டின் கீழ், பொதுப்பிரிவில், “தரவரிசை” (RANK) பட்டியலில், 35-ஆவது இடத்தை பிடித்துள்ளார். \r\n\r\nஇதன் மூலம், இவருக்கு திருநெல்வேலி “அரசு” மருத்துவக்கல்லூரியில், மருத்துவப்படிப்பு படிப்பதற்கான, “இடம்” கிடைத்துள்ளது. இதனால், இவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். \r\n\r\nஅத்துடன், புவனேசுவரி படித்த, மீனாட்சிபுரத்தில் உள்ள, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் “தலைமையாசிரியை” மேபல் ராணி, “நீட்” தேர்வுக்கான “பயிற்சி” (COACHING) ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோரும், மிகுந்த மகிழ்ச்சியடைந்து, மாணவி புவனேசுவரியை, வெகுவாக பாராட்டினர்.\r\n\r\nதிருநெல்வேலி செய்தியாளர் “மேலப்பாளையம்” ஹஸன்.
