Saturday, December 6, 2025
Homeசங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு தடை

சங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு தடை

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் நகரில் இறைச்சி கழிவுகளை ஆற்றுபாலத்தின் கீழ் கொட்டுவதற்கு பேருராட்சி செயல் அலுவலர் (பொ) ராஜலட்சுமி தடை விதித்தார்.

\n

சங்கராபுரம் நகரில் 50 க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன. இங்கு குவியும் இறைச்சி கழிவுகளை சங்கராபுரம் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டி வந்தனர்.

\n

\n

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியது. பாலம் வழியாக செல்வோர் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்

\n

இது சம்பந்தமாக இறைச்சி கடை உரிமையாளர்களிடம் பேரூராட்சி சார்பில் தெரிவித்து மீண்டும் அங்கு கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

\n

முதல் கட்டமாக பேரூராட்சி சார்பில் ஆற்றுப்பாலத்தின் கீழ் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள் மீது துப்புறவு பணியாளர்கள் பிளிசிங்பவுடர் தூவினர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments