Tuesday, December 16, 2025
Homeகும்பகோணத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கேண்டின் வசதி, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து  நீதிபதி ஆய்வு.

கும்பகோணத்தில், ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கேண்டின் வசதி, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து  நீதிபதி ஆய்வு.

கும்பகோணத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே ஒருங்கிணைந்த நீதிமன்றம் இயங்கி வருகிறது.

\n

கடந்த 2013-ம் ஆண்டு இந்த நீதிமன்ற வளாகத்தில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம், நீதித்துறை நடுவர் மன்றம்,

\n

முதன்மை அமர்வு நீதி மன்றம், கூடுதல் உதவி அமர்வு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம்,1-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம், 2-வது கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் இயங்கிவருகிறது.

\n

\n

இந்த நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வழக்கறிஞர்கள் கேண்டின் வசதி, கார் பார்க்கிங், அனைத்து நீதிமன்றங்களில் குளிர்சாதன வசதி ஆகியவை அமைத்து தரவேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

\n

இந்த நிலையில் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்தி தரும் வகையில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நீதிமன்றத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

\n

\n

இந்த ஆய்வின் போது நீதிமன்றத்திற்கு மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனுவை வழக்கறிஞர் சங்கம் தலைவர் விவேகானந்தன், தலைமையில் செயலாளர் செந்தில்நாதன், துணைத்தலைவர் இளங்கோவன் மற்றும் வழக்கறிஞர்கள் மனு கொடுத்தனர்.

\n

தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார், நீதிமன்றத்தில் ஏற்படுத்த கூடிய கேண்டின் வசதி, கார் பார்க்கிங் வசதிகள் குறித்து உரிய அறிக்கை தயார் செய்து அனுப்பிவைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

\n

\n

இந்த ஆய்வின் போது தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதி ஜெஸிந்தா மார்ட்டின், கூடுதல் மாவட்ட நீதிபதி ராதிகா, குற்றவியல் நீதிதுறை நீதிபதி சண்முகபிரியா, வட்டாட்சியர் வெங்கடேஸ்வரன், மற்றும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments