Theni District News And Updates
\n
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கடமலைக்குண்டு கிராமத்திலிருந்து வெள்ளிமலை செல்லும் சாலையில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது.
\n
ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் செயல்படும் இந்த கடையில் அரசின் விதிமுறையை மீறி 18 வயதுக்கு குறைவாக உள்ள சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருவதோடு 24 மணி நேரமும் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும்
\n
\n
\n
\n
\n
Latest District News And Updates
\n
இதன் காரணமாக விவசாயிகள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளதாகவும் குற்றம் சாட்டி கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி கிராமங்களை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கடமலைக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
\n
காவல்துறையினரிடம் மது விற்பனை குறித்து புகார் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்கும்படி வற்புறுத்தினர்.
\n
ALSO READ | புவனகிரி பகுதியில் சாலையோரங்களில் நிறுத்தப்படும் கனரக வாகனங்கள் விபத்து ஏற்படுத்தி உயிர்பலி வாங்க காத்திருக்கும் கொடூரம்.. கண்டு கொள்ளாத அதிகாரிகள்
\n
\n
\n
Online District News Today
\n
மக்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
\n
சிறுவர்களுக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
\n
\n
\n

\n