Saturday, December 6, 2025
Homeஇரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ! மனைவி நஞ்சருந்தி பலி!

இரத்தகாயங்களுடன் கணவனின் சடலம் மீட்பு ! மனைவி நஞ்சருந்தி பலி!

நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் கணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவியும் நஞ்சருந்தி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

\n

\n

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில் நெடுங்கேணி கீரிசுட்டான் பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடக்கின்றமை தொடர்பாக நெடுங்கேணி பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

\n

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். 

\n

\n

இதேவேளை உயிரிழந்த நபரின் மனைவியும் நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

\n

சம்பவத்தில் கீரிசுட்டான் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான லோகநாதன் வயது 47 மற்றும் அவரது மனைவியான லோகநாதன் பரமேஷ்வரி வயது 37 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளனர்.

\n

குறித்த இருவரும் முரண்பாடு காரணமாக சிலகாலங்கள் பிரிந்திருந்ததாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்

\n

 

\n

கணவனின் தலையில் இரத்தக்கா

\n

\n

யம் இருக்கும் நிலையில் இது கொலையாக இருக்கலாம் என்று பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன்

\n

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments