Saturday, December 6, 2025
Homeதிருச்சி அருகே சிவாலயத்தில் குரு பெயர்ச்சி விழா.

திருச்சி அருகே சிவாலயத்தில் குரு பெயர்ச்சி விழா.

திருச்சி மாவட்டம், முசிறி அடுத்துள்ள தா.பேட்டை அருள்மிகு காசி விசாலாட்சி  உடனமர் காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.

\n

விழாவை முன்னிட்டு யாக வேள்வி மண்டபத்தில் சிறப்பு பரிகார ஹோமம் நடைபெற்றது. 

\n

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, கலச பூஜை, திரவிய ஹோமம், பூர்ணா குதி , மகா தீபாராதனை, நவகிரக பூஜை மற்றும் யாக வேள்வி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

\n

\n

அதனைத் தொடர்ந்து யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீரை குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

\n

ரிஷபம், மிதுனம், சிம்மம் ,துலாம், தனுசு, கும்பம், மீனம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகார பூஜை செய்து கொண்டனர். குரு பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

\n

முன்னதாக காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments