Saturday, December 6, 2025
Homeதனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ள குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்புப்...

தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ள குரு பெயர்ச்சி முன்னிட்டு குரு பகவானுக்குச் சிறப்புப் பூஜைகள் மற்றும் தீபாராதனை

கும்பகோணம் அருகே திருப்பிறம்பியம் சாட்சிநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது செட்டிப் பெண்ணுக்கு இறைவன் சாட்சிசொன்ன தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

\n

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 46வது தலம் ஆகும். இக்கோயில் மதுரை ஆதினத்திற்குரிய கோயிலாகும்.

\n

இத்தகைய சிறப்பு பெற்ற தலத்தில் ராஜகோபுர வாயிலுக்கு வெளியே வலதுபுறம் தனிக்கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக குரு பகவான் குடிகொண்டுள்ளார்.

\n

\n

தமிழகத்திலேயே தனிக்கோயிலில் குரு பகவான் எழுந்தருளி அருள் வழங்கும் திருத்தலம் இது .சனகாதி முனிவர்களுக்கு நான்கு வேதங்களை உபதேசிக்கும் அற்புத மூர்த்தியாகவும் தட்சிணாமூர்த்தி விளங்குகிறார்.

\n

வாரந்தோறும் வியாழக்கிழமையில் நெய் விளக்கு ஏற்றி வைத்து வழிபட்டால் கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், தொழில் போன்றவற்றுக்கு அருள்பாலிக்கும் தென்முகக் கடவுள் அருள் பாலிக்கிறார்.

\n

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சி அடைவது வழக்கமான ஒன்று. இருந்தபோதிலும் குரு பகவானின் உச்சம் பெற்ற ராசிகள் பல விதமான பலன்களைப் பெற்றுச் செழிப்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

\n

\n

அந்த வகையில் செவ்வாய்க்கிழமை ஆனது இன்று மாலை 5.19 மணிக்கு மேஷ ராசிலிருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சி அடைகிறார்.

\n

இந்த குருப் பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சரியாக 5,19 சிறப்புப் பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.

\n

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அர்ச்சனையும் பரிகாரம் செய்து கொண்டனர்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments