Saturday, December 6, 2025
Homeஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக அரசு நடத்திட வேண்டும் - மாநில பொது செயலாளர்...

ஆசிரியருக்கான பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக அரசு நடத்திட வேண்டும் – மாநில பொது செயலாளர் முனைவர் பேட்ரிக் ரெய்மாண்ட பேட்டி

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம், பணி நிறைவு பாராட்டு விழா, தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்றவர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா

\n

திருச்சி தென்னூர் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் மாவட்டத் தலைவர் முனைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.

\n

\n

மாநில பொது செயலாளர் முனைவர் பேட்ரிக்ரெய்மாண்ட சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார்.

\n

கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் தங்கவேல், உமா, ஜான்கென்னடி, ரமேஷ்குமார், பாஸ்கரன், மேரிரோசலின், அமுதா மற்றும் அனைத்து வட்டார பொறுப்பாளர்களும் தேர்வு நிலை சிறப்பு நிலை பெற்ற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

\n

\n

தொடர்ந்து செய்தியார்களுக்கு பேட்டி :

\n

மாநில பொதுச் செயலாளர் முனைவர் பேட்ரிக் ரெய்மாண்ட தமிழ்நாடு அரசு விரைந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,

\n

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அரசாணை 243 நடைமுறைப்படுத்தி விரைவில் நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

\n

\n

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments