கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுக்காவில் சட்டமன்ற உறுப்பினராகவும் அரசு தலைமை கொறடாமான கோவி செழியன் அலுவலகம் கோவிந்தபுரம் மெயின் ரோட்டில் உள்ளது. \r\n\r\nஇந்நிலையில் தொடர்ந்து பண்டிகை காலம் என்பதால் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பூட்டி இருந்தது இன்று சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் கதவை திறந்து உள்ளே சென்றபோது வெளியே உள்ள மின் போட்டார் திருட்டுப் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அரசு தலைமை கொறடா கோவி செழியனுக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தனர். \r\n\r\nதகவலயறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவிடைமருதூர் காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டமன்ற அலுவலகத்தில் மின் மோட்டார் திருட்டு போனது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
