நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி சார்பில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரசு மேல்நிலைப்பள்ளி இருந்து துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார். \r\n\r\nபேரணியில் 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பேரணி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் ஏந்தியும் கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகள் வழியே ராமர் மடம் வரை சென்றனர்.\r\n\r\nஇந்த பேரணியில் நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர் நம் சமூகம் போதைப் பழக்கம் இல்லாத சமூகம் உருவாக வேண்டும் அதற்கு மாணவ-மாணவிகள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் ,\r\n\r\nமாணவ மாணவிகள் ஒவ்வொருவரும் ராணுவ வீரர்கள் போல் கட்டுக்கோப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து போதைப்பொருள் ஒழிப்பு குறித்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.\r\n\r\nநாகை மாவட்ட செய்தியாளர் செ.சீனிவாசன்.
