Saturday, December 6, 2025
Homeதிருவாரூரில் தீபாவளி பட்டாசு வெடித்ததில். சாலை ஓரம் நின்று இருந்த கார் பற்றி எரிந்து தீ...

திருவாரூரில் தீபாவளி பட்டாசு வெடித்ததில். சாலை ஓரம் நின்று இருந்த கார் பற்றி எரிந்து தீ விபத்து.

திருவாரூர் அருகே பொய்கை நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜவேலு (40) . சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதனால் ராஜவேலு தனது குடும்பத்தினருடன் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பொய்கை நல்லூரில் உள்ள வீட்டுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட ராஜவேலு குடும்பத்தினருடன் வந்திருந்தார். \r\n\r\nஇந்நிலையில் இன்று, பொய்கை நல்லூர் வீட்டுக்கான மின்சார கட்டணம் செலுத்துவதற்கு திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தனது மனைவி மற்றும் 14 வயது மகளுடன் தனது காரில் வந்தார். \r\n\r\nகாரை மின்வாரிய அலுவலக சாலை ஓரமாக நிறுத்தி வைத்து விட்டு மின்சார கட்டணம் செலுத்த அலுவலகத்துக்குள் ராஜவேலு மற்றும் அவரது மனைவி மகள் ஆகியோர் சென்றனர்.\r\nஅப்போது அந்த பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனர். \r\n\r\nபட்டாசு வெடித்த போது வெடித்த பின்னர் அந்த அந்த தாள்கள் சிதறி எறிய தொடங்கியுள்ளன. அதில் எதிர்பாராத விதமாக கார் பற்றி எறிய தொடங்கியது அருகில் இருந்தவர்கள் காரை அணைக்க முற்பட்டும் முடியாத நிலையில் கார் முற்றிலும் எரிந்து கருகியது. \r\n\r\nஉடனடியாக அங்கிருந்தவர்கள் திருவாரூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் அதன் அடிப்படையில் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். \r\n\r\nஇந்த சம்பவம் குறித்து ராஜவேலு திருவாரூர் நகர காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். \r\n\r\nதீபாவளி பண்டிகை கொண்டாட வந்த குடும்பத்தினருக்கு 5 லட்சம் மதிப்பிலான கார் எரிந்து போன சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\r\n\r\nதிருவாரூர் செய்தியாளர் இளவரசன்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments