கும்பகோணத்தில் அரசினர் கலைக்கல்லூரி முன்பு மத்திய அரசு நடத்தும் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் இந்தியை கட்டாய பாடமாக்குவது குறித்து பரிந்துரைக்கப்பட்டது. \r\n\r\nமேலும், மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தும் பரிந்துரையும் உள்ளது. இது இந்தியை படித்தால் மடடுமே வேலை என்கிற நிலையை உருவாக்கியுள்ளது. \r\n\r\nஇந்தி பேசாத மாநிலங்களில் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் மறைமுக சதித்திட்டமாக இருப்பதாக கூறி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மாவட்ட துணை தலைவர் அபிலாஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. \r\n\r\nஇந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் வினித் போஸ் வெங்கடேஷ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு இந்தி திணிப்பு கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.\r\n\r\nஇந்தியை அலுவலக மொழியாக கொண்டு வர மத்திய அரசு மசோதா கொண்டுவந்துள்ளது.\r\n\r\nகும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.
