Saturday, December 6, 2025
Homeசுங்கச்சாவடி ஊழியர்கள் : தொடர்ந்து  22-வது நாள்  உள்ளிருப்பு போராட்டம்.

சுங்கச்சாவடி ஊழியர்கள் : தொடர்ந்து  22-வது நாள்  உள்ளிருப்பு போராட்டம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி, மற்றும் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி ஆகிய இரண்டு சுங்கச்சாவடிகளிலும் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு நிலைகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.\r\n\r\nஇந்த நிலையில், சுங்கச்சாவடி நிர்வாகம் ஆட்கள் குறைப்பு நடவடிக்கையாக பல்வேறு நிலைகளில் பணிபுரிந்த சுமார் 56 ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர், இதனால் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக மற்ற ஊழியர்களும் பணிக்கு செல்லாமல் கடந்த 01-ம் தேதி முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர், \r\n\r\nஇந்த நிலையில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நூதன முறையில், போராட்டம் நடத்தி வருகின்றனர், அதாவது உண்ணாவிரதம் குடும்பத்துடன் போராட்டம், பட்டை நாமம் போட்டுக்கொண்டு போராட்டம், முகத்தில் கருப்பு துணி அணிந்து போராட்டம், பறை அடித்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், \r\n\r\nபல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் இவர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களது ஆதரவையும் தெரிவித்து வந்தனர் ஆனால், இதுவரை சுங்கச்சாவடி நிர்வாகம் செவி சாய்க்காமல், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது, கடந்த சில நாட்களுக்கு முன்பு, வெளி ஆட்களை வைத்து சுங்கச்சாவடி நிர்வாகம் சுங்க கட்டணம் வசூல் செய்ய துவங்கியதால், \r\n\r\nமேலும் அதிர்ச்சி அடைந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று 22-வது நாளாக தங்களது போராட்டங்கள் மத்திய, மாநில அரசுகளின் காதுகளுக்கு கேட்கும் விதமாக பறை அடித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்ததாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments